திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்கும் தேமுதிக!-பாஜக
சென்னை: திமுக எதிர்ப்பு ஓட்டுகளை பிரித்து அவர்களுக்கு உதவத் தான் தேமுதிக களமிறங்கி உள்ளது. எனவே தேமுதிகவை மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை மேடவாக்கத்தில் நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர்,
பாஜக ஆட்சிக் காலம் இந்தியாவின் பொற்காலம். வாஜ்பாய் ஆட்சியில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டது. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. காங்கிரஸ் அரசு ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டுகிறது. நாடுமுழுவதும் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது.
3வது அணியின் பிரதமர் யார் என்பதே தெரியவில்லை. மன்மோகன் சிங் சோனியாவின் கைப்பாவையாக இருக்கிறார். இவர் பிரதமர் ஆக வேண்டுமா? இரும்பு மனிதர் அத்வானி பிரதமர் ஆக வேண்டுமா?.
பாஜக ஆட்சியில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டந. சென்னை- கொல்கொத்தா தங்க நாற்கர சாலை இருக்கும் வரை வாஜ்பாய் பெயர் மக்கள் மனதில் இருக்கும்.
வாக்காளர்கள் வேட்பாளரை பற்றி சிந்திக்க வேண்டும் அவர் சார்ந்த கட்சியின் பின்னணியையும் சிந்தியுங்கள். கொள்கை, லட்சியத்துக்காக கட்சிகளை ஆரம்பிக்கிறார்கள். பின்னர் அதிகார பயனை அடைவதற்காக எல்லாவற்றையும் கைவிட்டு விடுகிறார்கள்.
தேமுதிக தனித்து நிற்பது நாட்டுக்கு நல்லதல்ல...
விஜயகாந்த் தனித்து நிற்பதாக சொல்கிறார். திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகளை பிரிப்பதற்காகத்தான் தேமுதிக களம் இறங்கியுள்ளது.
இவர்கள் தனியாக நிற்பது நாட்டுக்கு நல்லதல்ல. வெற்றி பெற்றாலும் பயனில்லை. ஒட்டுமொத்தமாக மக்கள் தேமுதிகவை நிராகரிக்க வேண்டும்.
இது அதிமுகவா... திமுகவா... என்பதை முடிவு செய்யும் தேர்தல் அல்ல. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று சிந்தியுங்கள். வெற்றி பெறும் வேட்பாளர் யார் என்று பார்க்காதீர்கள். யார் வெற்றி பெறுவது நாட்டுக்கு நல்லது என்று வேட்பாளர்களை தேர்வு செய்து வாக்களியுங்கள்.
அப்சல் குருவை தூக்கில் போடுவோம்...
பாஜக ஆட்சியின் போதும் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்தோம். தண்டனையும் பெற்றுக் கொடுத்தோம். ஆனால் அப்சல் குருவை தூக்கில்போட காங்கிரஸ் அரசு தயங்குகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அப்சல்குருவை தூக்கில் போடுவோம். பயங்கரவாதத்தை ஒடுக்க சட்டம் கொண்டு வருவோம் என்றார் கணேசன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications