Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீவிரவாத தாக்குதல்-தமிழகத்திற்கு ஐ.பி. எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் சமயத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு (ஐ.பி) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து மாநில காவல்துறை டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகள் ஐ.பி. அதிகாரிகளுடன் உயர் மட்ட ஆலோசனையை நடத்தியுள்ளனர்.

லஷ்கர் இ தொய்பா, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் பெருமளவிலான தாக்குதல்களை நடத்தலாம். முக்கியத் தலைவர்களைக் குறி வைக்கலாம் என உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து டிஜிபி உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகளுடன் ஐபி அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர்.

முக்கியத் தலைவர்களின் பாதுகாப்பு, அவர்களின் பிரசாரங்களின்போது கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், விடுதலைப் புலிகளும் தாக்குதல் நடத்தக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் ஐபி எச்சரித்துள்ளதாம். முதல்வர் கருணாநிதி, தேசியத் தலைவர்கள் ஆகியோர் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபடும்போது அதி தீவிர பாதுகாப்பு வழங்குமாறும் தமிழக காவல்துறையை ஐபி கேட்டுக் கொண்டுள்ளது.

தலைவர்களின் கூட்டங்களின்போது அவர்களுக்கு அருகே பெருமளவில் கூட்டம் கூடுவதைத் தடுக்க வேண்டும். அவர்களின் பிரசாரக் கூட்டங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் ஐபி எச்சரித்துள்ளதாம்.

ஒவ்வொரு தலைவருக்கும் என்ன மாதிரியான பாதுகாப்பு தர வேண்டும் என்பது குறித்தும் தமிழக காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

இந்தக் கூட்டத்தில் ஐபியின் கூடுதல் இயக்குநர் ரேணுகா மட்டூ, தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேந்திரன், உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி அனூப் ஜெய்ஸ்வால், சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசு அலுவலகஙகளுக்கு பலத்த பாதுகாப்பு:

மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு வரும் அனைவரின் பெயர்களையும் பதிவு செய்யவும், கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை செயலாளர் ஜோதி ஜெகராஜன் இது தொடர்பாக அனைத்து அரசு செயலாளர்களுக்கும், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், அனைத்து துறைகளின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,

மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

ஒன்றுக்கு மேல் இணைந்திருக்கும் அரசு அலுவலகங்களில் பாதுகாப்பை கண்காணிக்க கண்டிப்பாக உடனடியாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும். அவர்தான் பாதுகாப்புக்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.

ஒவ்வொரு அரசு அலுவலகத்திற்கும் உள்ளே செல்ல ஒரு வழியும், வெளியே வர ஒரு வழியும்தான் இருக்கவேண்டும். அதைவிடுத்து பல்வேறு வழிகள் இருக்கக்கூடாது. சில அலுவலகங்களில் தவிர்க்கமுடியாத பட்சத்தில் 2 வழிகள் இருக்கலாம். முடிந்தவரை ஒரே வழியை பயன்படுத்தவேண்டும்.

வரவேற்பு அதிகாரிகள்...

ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் வரவேற்பு அதிகாரிகள் இருக்கவேண்டும். அவர்கள் வருவோரிடம் அவர்களிடத்தில் யார்? எதற்காக வருகிறார்? என்ற விவரத்தை பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும். அதை வரவேற்பாளர் கண்காணிக்கவேண்டும்.
அலுவலகத்துக்குள் வரும் வெளிநபர்களுக்கு தனி அடையாள அட்டை கொடுத்து அவர்கள் வெளியே செல்லும்போது அவற்றை திரும்ப பெறவேண்டும். அனைத்து அரசு அலுவலர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கவேண்டும்.

ரகசிய கேமிரா...

நுழைவு வாயிலில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காண்க்க வேண்டும். பாதுகாப்பு சரியாக உள்ளதா? என்று பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளும்,மாவட்ட கலெக்டர்களும் அவ்வப்போது ஆய்வு செய்யவேண்டும்.

கலெக்டர் அவ்வப்போது பாதுகாப்பு குறித்து அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தவேண்டும். இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இருக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து சென்னை டிபிஐ வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில்,

டிபிஐ வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. கழிப்பறை வசதிகள் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. பாதுபாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

தற்போது டி.பி.ஐ. வளாகத்திற்குள் நுழைய உள்ள 3 வாயில்களில் ஒன்றை மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஒரு வழியாக வந்து மற்றொரு வழியாக வெளியேற தீர்மானிக்கப்பட்டது. சம்பந்தமில்லாத கார்கள், வேன்கள் உள்ளே வர தடைவிதிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+