மதிமுகவுக்கு இன்றே கடைசி சான்ஸ்!

நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தூதராக இந்திய கம்யூனிஸிட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் சந்தித்துப் பேசிய பின்னர் மதிமுக கேட்ட விருதுநகர், தஞ்சாவூர், ஈரோடு, திருவள்ளூர் ஆகிய 4 தொகுதிகளை ஒதுக்க ஜெயலலிதா முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தொகுதிகள் கிடைத்தால் விருதுநகரில் வைகோ, தஞ்சையில் ஜெயபாரதி விஸ்வநாதன், ஈரோட்டில் கணேச மூர்த்தி, திருவள்ளூரில் மல்லை சத்யா ஆகியோர் போட்டியிடலாம்.
அதே நேரத்தில் வைகோ கேட்கும் 5வது தொகுதியான காஞ்சிபுரம் தரப்படாது என்று தெரிகிறது. இங்கு சசிகலாவின் அக்காள் மகனும் இப்போது போயஸ் கார்டனில் கொடி கட்டிப் பறப்பவருமான டாக்டர் வெங்கடேஷ் தனக்கு மிக வேண்டிய ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளாராம்.
இதனால் தான் கேட்ட 4 தொகுதிகள் கிடைக்கும் ஆறுதலுடன் கூடுதல் சீட் கேட்பதை வைகோ கைவிட்டால் உடன்பாடு ஏற்படும். இல்லாவிட்டால் சிக்கல் தான்.
அதிமுக-மதிமுக இடையே தொகுதிப் பங்கீடு இன்று இறுதி செய்யப்படாவிட்டால் நாளை தமிழகத்தில் பரபரப்பான பல அரசியல் திருப்பம் ஏற்படலாம்.
இந் நிலையில் இன்று மாலை கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளார் வைகோ. மேலும் நாளை மதிமுக பொதுக் குழுக் கூட்டமும் சென்னையில் நடக்கவுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications