நாகர்கோவில் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
நெல்லை: நெல்லையில் மூளைச்சாவை சந்தித்த பெண்ணின் உடல் உறுப்புகள் பலருக்கும் தானமாக வழங்கப்பட்டது.
நாகர்கோவில் அருகேயுள்ள கீழபெருவிளையை சேர்ந்தவர் தினேஷ். மதுரையை சேர்ந்த கலா என்பவரை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 5ம் தேதி தினேசும, கலாவும் வழுக்கம்பாறை கிருஸ்துவ ஆலயத்திற்கு சென்று விட்டு பார்வதிபுரம் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் பைக்கில் இருந்து பின்புறமாக சரிந்த கலாவிற்கு தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தினேஸ் லேசான காயத்துடன் தப்பினார். இதையடுத்து கலாவை நாகர்கோவிலில் உள்ள ஜெயசேகரன் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மறுநாள் 6ம் தேதி கலா மூளைச்சாவை சந்தித்து விட்டார் என மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர். இனி கலாவை காப்பாற்ற முடியாது என நினைத்த தினேஷ் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து, அதன்மூலம் பலருக்கு வாழ்க்கை கொடுக்க முன்வந்தார்.
இதற்கான வசதி நாகர்கோவிலில் இல்லாததால் நெல்லைக்கு செல்லுமாறு தினேசிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். அந்த மருத்துவமனையில் டாக்டர் தேவபிரசாத் நெல்லையில் உள்ள கேலக்ஸி மருத்துவமனை டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து 6ம் தேதி இரவு கலாவை நெல்லை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். நரம்பியல் நிபுணர் கணேசன் கலாவை பரிசோதனை செய்தபோது மூளைச்சாவு உறுதி செய்யப்பட்டது.
கலாவின் உடல் உறுப்புகளை தானமாக பெற முடிவெடுத்த டாக்டர்கள் அந்த உடல் உறுப்புகளை பிறருக்கு பொருத்துவதற்காக மதுரை மீனாட்சி மிஷன், சென்னை அப்போல்லோ டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த மருத்துவ குழுவினர் நேற்று நெல்லை வந்தனர். நேற்று பிற்பகல் 1 மணிக்கு கேலக்ஸி மருத்துவமனை தலைமை டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் டாக்டர்கள் ஆவுடையப்பன், பூர்ணலிங்கம், சவுந்திரராஜன், மயக்கவியல் நிபுணர்கள் கண்ணன், லெட்சுமணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் 4 மணி நேரத்தில் கலாவின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர்.
சிறுநீரகம் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த கிருஸ்டிக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுசீரகம் மதுரை மீனாட்சி மீஷன் டாக்டர்களிடம் ஓப்படைக்கப்பட்டது. இதயம், கல்லீரல் ஆகியவை சென்னை அப்பல்லோ டாக்டர் ஆனந்த் கர்கார் தலைமையிலான குழுவிடம் ஓப்படைக்கப்பட்டது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications