சிலை திருட்டு: ஜெயந்திரர் மீது குற்றமில்லை-போலீசார்
மன்னார்குடி : காஞ்சி ஜெயந்திரர் மீது சுமத்தப்பட்ட சிலை திருட்டு புகாரில் உண்மையில்லை என்பதால், இந்த வழக்கை மேலும் விசாரிக்க தேவையில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ளது பெரியகுடி. இங்கு புகழ் பெற்ற சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த 2005ம் ஆண்டு காஞ்சி ஜெயந்திரர் சுவாமிகள் வருகை தந்தார்.
அப்போது அந்த கோயிலில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த சிலை மற்றும் நவரத்தின கற்கள் காணவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் மன்னார்குடியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சி ஜெயந்திரர் மீது கோட்டூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரை தொடர்ந்து மேலும் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் போலீசார் குறித்த காலத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பவர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுப்பிரமணியன் சென்னை உயர் நீதி மன்றத்தில் கோட்டூர் போலீசார் விரைவில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மன அளித்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கோட்டூர் போலீசார் 6 மாத காலத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனையடுத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீசார் இரு தரப்பையும் வரவழைத்து விசாரணை நடத்தியதில், சுரேஷ் கொடுத்த புகாரில் உண்மை இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கில் விசாரணை தேவையில்லை என்று போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கான அறிவிப்பை போலீசார் சுரேஷிடம் கொடுத்தனர். ஆனால் அவர் வாங்க மறுத்து விட்டார். இதனையடுத்து அந்த அறிவிப்பு நோட்டீசை சுரேஷ் வீட்டில் போலீசார் ஒட்டினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications