கோவை-வெல்வாரா தொழிற்சங்க தோழர் நடராஜன்?

கோவை தொகுதி வேட்பாளரான பி.ஆர்.நடராஜன், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும், கோவை மாவட்டச் செயலாளராகவும் பணி யாற்றி வருகிறார்.
கல்லூரியில் படிக்கும் போதே, தொழிற்சங்கத் தலைவர் வி.பி.சிந்தனால் ஈர்க்கப்பட்டு, அரசியலுக்கு வந்தவர். மாணவர் சங்க தலைவராக இருந்து செயல்பட்டுள்ளார்.
ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும், கட்சியின் மாநகரச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கோவை மாவட்ட மக்களின் பல்வேறு போராட்டங்களுக்கு தலைமையேற்றவர். குடிசைவாழ் மக்களின் குடியிருப்பு பிரச்சனை, பட்டா பிரச்சனை, துப்புரவு பணியாளர்கள் பிரச்சனை உட்பட பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர். இவருக்கு வயது 59.
துப்புரவுத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும், ஓட்டல் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1996-ம் ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் முழு நேர ஊழியராக செயல்பட்டு வருகிறார்.
கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப் பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் நீண்ட காலம் பணியாற்றி கோவை மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ள தோழர் கே.ரமணியின் மூத்த மகளான ஆர்.வனஜாவை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications