ரூ. 17 லட்சம் லாட்டரி சீட்டுகள் பறிமுதல்- 4 பேர் கைது
சேலம் : சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 17 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சேலம் அஸ்தம்பட்டி மற்றும் 5 ரோடு பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.
இதனையடுத்து துணை கமிஷனர் ஜான்நிக்கல்சன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து மாறுவேடத்தில் அஸ்தம்பட்டி மற்றும் 5 ரோடு பகுதியில் சோதனை நடத்தினர்.
இதில் அஸ்தம்பட்டி பகுதியில் சந்தோஷ் என்பவரும், 5 ரோடு பகுதியில் குப்பன், கண்ணன், பரதன் ஆகிய மூவரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்த ரூ. 17 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் லாட்டரி சீட்டு விற்பனைக்கு பயன்படுத்திய 17 செல்போன்கள், 6 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications