மதிமுகவிலிருந்து யாரும் பேசவில்லை: இல.கணசன்
சென்னை: மதிமுகவிலிருந்து எந்தத் தலைவரும் இதுவரை பாஜகவுடன் பேசவில்லை என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று பேசுகையில், முதல் கட்டமாக நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், வடசென்னை, தென்சென்னை, திருச்சி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட தேர்தல் குழு முடிவு செய்துள்ளது.
சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார், நாடாளும் மக்கள் கட்சி கார்த்திக் ஆகியோருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உடன்பாடு ஏற்பட்டால் 2ம் கட்டமாக நாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்போம்.
முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிட வாய்ப்புள்ளது. மதிமுக தரப்பில் இருந்து யாரும் எங்களுடன் பேச்சு நடத்தவில்லை.
விஜயகாந்த் மீது பாய்ச்சல்..
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற விஜயகாந்த் சட்டமன்றத்துக்கு சரியாக வரமுடியவில்லை.
மக்களவை தேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் இவரை போலத்தான் இருப்பார்கள்.
அவரது மாயாஜாலத்தை பார்த்து ஏமாற தமிழக மக்கள் தயாராக இல்லை. அவரது கட்சியை முதலில் புறக்கணிக்க வேண்டும் என்றார் இல.கணேசன்.
தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் பாஜகவை கூட்டணியில் சேர்க்க மறுத்து விட்டன. இதனால் தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்குக் கொண்டு வர கடுமையாக முயன்று வந்தது பாஜக.
ஆரம்பம் முதலே தேமுதிகவை தன்னுடன் இணைத்துக் கொள்ள அது கடுமையாக முயன்றது. ஆனால் அதில் சிக்காமல் நழுவி விட்டார் விஜயகாந்த்.
இந்த நிலையில் மக்கள் தேமுதிகவை வருகிற தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என கூறியுள்ளார் இல.கணேசன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications