புதுச்சேரி காங். அரசுக்கு பாமக ஆதரவு வாபஸ்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாமக விலக்கிக் கொண்டுள்ளது. இருப்பினும் திமுகவின் ஆதரவு இருப்பதால், காங்கிரஸ் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
திமுக கூட்டணியில் தற்போது பாமக இல்லை. மேலும், அதிமுக கூட்டணியில் சேர்ந்து விட்டது.
இந்த நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாமக விலக்கிக் கொண்டுள்ளது.
நேற்று புதுவை மாநில பாமக செயலர் ராமதாஸ் எம்.பி தலைமையில் எம்.எல்.ஏக்கள் அனந்தராமன், பன்னீர்செல்வம், அருள்முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆளுநர் மாளிகைக்கு சென்றனர்.
ஆளுநரின் செயலாளர் ஜோஷியிடம் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதற்கான கடிதத்தை அளித்தனர்.
புதுச்சேரி அரசுக்கு திமுக ஆதரவு இருப்பதால் ஆட்சி கவிழும் வாய்ப்பே இல்லை.












Click it and Unblock the Notifications