வி.சி வேட்பாளர்கள்: சிதம்பரம்-திருமா: விழுப்புரம்-வேலாயுதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கான வேட்பாளர்களை முதல்வர் கருணாநிதியுடனான சந்திப்புக்கு பி்ன்னர் அறிவிக்கப்படும் என திருமாவளவன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் எஸ்.பி. வேலாயுதமும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பாமக வேட்பாளர் பொன்னுசாமியை எதிர்கொள்கிறார்.












Click it and Unblock the Notifications