பக்கத்து சீட் பெண்ணுடன் காதலன் உறவு-கடுப்பான காதலி ரகளை- விமானத்தில் பரபரப்பு

பெங்களூரிலிருந்து லண்டன் சென்ற கிங் பிஷர் விமானம் இது. விமான பயண நேரம் 9 மணி நேரமாகும்.
இந்த விமானத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி சாரா ஹென்னான் (35), தனது காதலர் டேணியல் மெலியாவுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். இருவரும் விமானத்தில் ஏறிய பின்னர் வயிறு முட்டக் குடித்தனர்.
அந்த மயக்கத்தில் லேசாக கிறங்கிப் போய்க் கிடந்தார் சாரா. திடீரென அவருக்கு விழிப்பு வந்து பார்த்தார். பக்கத்தில் இருந்த காதலரைக் காணவில்லை. எங்கே போனார் என்று தேடியபோது பின் சீட்டில் போர்வைக்குள் ஆள் நெளிவது தெரிய வந்தது.
போர்வையை விலக்கி்ப் பார்த்தபோது, காதலர் டேணியல், ஒரு பெண்ணுடன் படுத்திருந்தது தெரிந்து ரெளத்திரமானார் சாரா. டேணியலுடன் படுத்திருந்த பெண் கிளார் இர்பி (29). இவர் டேணியலுக்கு அடுத்த சீட்டில் பயணித்தவர். காதலி குடிபோதையில் மயங்கியதும் இர்பியை 'கரெக்ட்' செய்து விட்டார் டேணியல்.
டேணியலையும், இர்பியையும், பிடி பிடியென்று பிடித்து சாரா போட்ட கூச்சலில் பயணிகள் நடுங்கிப் போயினர்.
விமான ஊழியர்கள் சாராவை அமைதிப்படுத்தி அமர வைத்தனர்.
விமானம் ஒருவழியாக ஹீத்ரூ விமான நிலையம் வந்ததும் உள்ளே நுழைந்த போலீஸார் இர்பியை முதலில் கைது செய்தனர். பின்னர் சாரா மற்றும் டேணியலும் கைது செய்யப்பட்டனர்.
விமானத்திற்குள் குடித்து விட்டு அநாகரீகமாக நடந்து கொண்டதாக 3 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இர்பி, முன்னாள் ஸ்டாக் புரோக்கர் ஆவார். புல்ஹாம் என்ற இடத்தைச் சேர்ந்தவர். டேணியல் பிர்மிங்காமைச் சேர்ந்தவர். சாராவும் பிர்மிங்காமைச் சேர்ந்தவர்தான்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
பிரபல கின்னஸ் மது தயாரிப்பு நிறுவன குடும்பத்தைச் சேர்ந்தவர் இர்பியின் தந்தை. ஏற்கனவே திருமணமானவர். ஒரு குழந்தையும் உண்டு.
இந்த சம்பவம் குறித்து இர்பி பேட்டிகள் அளிக்க மறுத்து விட்டார். அதேசமயம், இதுகுறித்து சட்ட ஆலோசனையை கேட்டுள்ளேன். மேலும் விவாதிக்க விரும்பவில்லை. நான் நிரபராதி என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications