ஜெ.விடம் ஆசி பெற்ற அதிமுக-சிபிஎம் வேட்பாளர்கள்

Subscribe to Oneindia Tamil

ADMK, CPM candidates meet Jaya
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களும், சிபிஎம் வேட்பாளர்களும் இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றனர்.

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எஸ்.எஸ்.சந்திரன், திருப்பூர் சிவசாமி, கடலூர் மு.சி.சம்பத், ராமநாதபுரம் சத்தியமூர்த்தி, பெரம்பலூர் மருதைராஜ், திண்டுக்கல் பாலசுப்பிரமணி, திருச்சி குமார் ஆகியோர் இன்று போயஸ் தோட்டத்திற்கு விரைந்தனர்.

அங்கு ஜெயலலிதாவை சந்தித்து அனைவரும் வாழ்த்துக்களையும், ஆசியையும் பெற்றனர்.

அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் கன்னியாகுமரி பெல்லார்மின், மதுரை மோகன், கோவை நடராஜ் ஆகியோர், கட்சி மாநில செயலாளர் வரதராஜனுடன் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றனர்.

பின்னர் வெளியில் வந்த வரதராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 16ம் தேதி எங்களது பிரசாரத்தை சென்னையிலிருந்து தொடங்குகிறோம்.

இதில், பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தப் பிரசாரக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நாற்பது வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்படுவார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+