நேருக்கு நேர்..10 தொகுதிகளில் திமுக Vs அதிமுக
சென்னை: திமுகவுக்கும், அதிமுகவுக்கும் 10 தொகுதிகளில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதும் தொகுதிகளில்தான் தேர்தல் பிரசாரமும் சரி, வாக்குப் பதிவும் சரி படு விறுவிறுப்பாக இருக்கும்.
இந்தத் தொகுதிகளில்தான் ஏகப்பட்ட கலாட்டாக்களும் அரங்கேறும். போட்டி போட்டு பணம் கொடுப்பதும் அமர்க்களமாக இருக்கும்.
வரும் லோக்சபா தேர்தலில் இரு கட்சிகளும் 10 தொகுதிகளில் மட்டுமே நேரடியாக மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணிக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதையே இது காட்டுகிறது. மேலும், சில தொகுதிகளில் ஒரு கட்சியை இன்னொரு கட்சி சந்திக்க பயந்தும் கூட அவற்றை கூட்டணிக் கட்சிகளுக்கு தள்ளி விட்டுள்ளனர்.
மொத்தத்தில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் இரு கட்சிகளும் நேரடியாக மோதும் தொகுதிகள்..
1. தென்சென்னை
- ஆர்.எஸ்.பாரதி (திமுக), சிட்லபாக்கம் ராஜேந்திரன் (அதிமுக)
2. மத்திய சென்னை
- தயாநிதி மாறன் (திமுக), நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் (அதிமுக).
3. திருவள்ளூர் (தனி)
- காயத்ரி ஸ்ரீதரன் (திமுக), ஆர்.ராஜன் (அதிமுக)
4. கிருஷ்ணகிரி
- சுகவனம் (திமுக), நஜ்ஜேகவுடா (அதிமுக)
5. பெரம்பலூர்
- நெப்போலியன் (திமுக), மருதைராஜ் (அதிமுக)
6. கரூர்
- கே.சி.பழனிசாமி (திமுக), மு.தம்பிதுரை (அதிமுக)
7. நாமக்கல்
- காந்திசெல்வன் (திமுக), வைரம் தமிழரசி (அதிமுக)
8. பொள்ளாச்சி
- சண்முக சுந்தரம் (திமுக), கே.சுகுமார் (அதிமுக).
9. ராமநாதபுரம்
- ஜெ.கே.ரித்தீஷ் (திமுக), சத்திய மூர்த்தி (அதிமுக)
10. தூத்துக்குடி
- ஆர்.எஸ் ஜெயதுரை (திமுக), டாக்டர் சிந்தியா பாண்டியன் (அதிமுக).
தலைநகர் சென்னையில் மொத்தம் 3 தொகுதிகள் உள்ளன. இதில் மூன்றிலும் திமுக போட்டியிடுகிறது. ஆனால் அதிமுக வட சென்னையை இந்திய கம்யூனிஸ்டுக்குக் கொடுத்து விட்டு மற்ற இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
2 தொகுதிகளில் திமுக - மதிமுக மோதல்:
2 தொகுதிகளில் மட்டும் திமுகவும், மதிமுகவும் நேரடி மோதலை சந்திக்கின்றன.
தஞ்சாவூரில் மத்திய இணை அமைச்சர் பழனி மாணிக்கத்தை மதிமுக வேட்பாளர் சந்திக்கிறார்.
அதேபோல நீலகிரியில் மத்திய அமைச்சர் ராசாவை, மதிமுக வேட்பாளர் எதிர்கொள்ளவுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications