விழுப்புரம்-சிறுத்தைகளின் தொழிலதிபர் வேட்பாளர்
Subscribe to Oneindia Tamil

சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வருகிறார் வேலாயுதம். ரியல் எஸ்டேட் தொழிலை செய்து வருகிறார்.
53 வயதாகும் இவர் முன்பு அதிமுகவில் இருந்தவர். சமீபத்தில்தான் அங்கிருந்து விலகி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார்.
சென்னை செங்கல்பட்டு பால்வளைத்துறை தலைவராகவும் இருந்தவர்.
பெருத்த பணக்காரரான இவர் விழுப்புரம் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். திமுகவின் துணையுடன் வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கட்சியில் வேலாயுதம் இதுவரை எந்தப் பொறுப்பிலும் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications