பெட்டிக்கடைக்காரருக்கு தென்காசி சிபிஐ வேட்பாளர் சீட்

லிங்கம் தென்காசி தொகுதி வேட்பாளரனது தனிக் கதை. முதலில் இவர் பரிசீலனை வரிசையில் இல்லை.
தற்போது இத்தொகுதியின் சிபிஐ எம்.பியான அப்பாத்துரைக்கு சீட் கிடையாது என முதலிலேயே தீர்மானிக்கப்பட்டு விட்டது.
இதைத் தொடர்ந்து உள்ளூரைச் சேர்ந்த டாக்டர் ராஜகுரு மற்றும் வெளியூரைச் சேர்ந்த டாக்டர் ரவீந்திரநாத் ஆகியோர் சீட் கேட்டிருந்தனர்.
இவர்களில் ரவீந்திரநாத் பின்னர் விலகிக் கொண்டார். இதையடுத்து ராஜகுருவுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ராஜகுரு இதுவரை சிபிஎம்.மில் இருந்தவர். இங்கு வந்து சேர்ந்த அவருக்கு உடனடியாக சீட் தருவது சரியாக இருக்காது என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அடித்தது அதிர்ஷ்டம் லிங்கத்திற்கு. இவர் ராஜபாளையம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம் தாலுகாவில் உள்ள முத்துச்சாமி புரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் லிங்கம். தேர்தலில் இவர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
சுந்தரம்மாள் என்ற மனைவியும், பகவத்சிங் என்ற மகனும், வீரகல்பனா என்ற மகளும் உள்ளனர்.
தற்போது இவர், மாநிலக்குழு உறுப்பினராக, மாவட்ட செயற்குழு உறுப்பினராக, ராஜபாளையம் வட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து வருகிறார்.
விவசாயம் இவரது தொழில். கூடவே பெட்டிக் கடையும் வைத்து நடத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications
