பிரேமலதா: 33 நாள் சூறாவளி பிரச்சாரம்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா தனது சூறாவளி தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கினார். 33 நாட்களுக்கு அவர் பிரசாரம் செய்கிறார். தம்பி சுதீஷ் தொகுதியில் மட்டும் 3 நாட்களுக்கு அவர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்.
தமிழகத்திலேயே முதல் ஆளாக விஜயகாந்த்தான் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி விறுவிறுவென போய்க் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்தும் இன்று முதல் தனது பிரசாரத்தைத் தொடங்கினார்.
இன்று அவர் பழவேற்காட்டிலிருந்து பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.
நாளை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் வக்கீல் அருண்சுப்பிரமணியனை ஆதரித்து ஆலந்தூர், தாம்பரம், ஸ்ரீபெரும்பதூர், அம்பத்தூர், மடிப்பாக்கம், பல்லாவரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முரசு சின்னத்துக்கு வாக்கு கேட்கிறார்.
10ம் தேதி மத்திய சென்னை தொகுதியில் ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, துறைமுகம், எழும்பூர், வில்லிவாக்கம், அண்ணாநகர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
11 ந்தேதி காலையில் காஞ்சீபுரம், மாலையில் தென்சென்னை, 12 ந்தேதி வடசென்னை, 13 ந்தேதி காலையில் அரக்கோணம், மாலையில் வேலூர், 14 ந்தேதி காலையில் ஆரணி, மாலையில் திருவண்ணாமலை, 15 ந்தேதி விழுப்புரம், 16 ந்தேதி கடலூரிலும் பிரசாரம் செய்கிறார்.
18 ந்தேதி காலையில் பெரம்பலூர், மாலையில் திருச்சி, 19 ந்தேதி காலையில் திண்டுக்கல், மாலையில் கரூர், 20 ந்தேதி மீண்டும் திண்டுக்கல், 21 ந்தேதி மதுரையிலும் ஆதரவு திரட்டுகிறார்.
22 ந்தேதி சிவகங்கை, 23 ந்தேதி ராமநாதபுரம், 24, 25 ஆகிய தேதிகளில் விருதுநகர், 26 ந் தேதி தூத்துக்குடி, 27 ந்தேதி நெல்லை, 28 ந்தேதி கன்னியாகுமரி, 29 ந்தேதி தென்காசி, 30 ந்தேதி தேனியில் பிரசாரம் செய்கிறார்.
மே1 ந்தேதி பொள்ளாச்சி, 2 ந்தேதி கோவைம், 3 மற்றும் 4 ந் தேதி காலையில் திருப்பூர் மற்றும் மாலையில் ஈரோடு, 5 ந்தேதி காலையில் நாமக்கல், மாலையில் சேலம், 6 ந்தேதி தர்மபுரி, 7 ந்தேதி கிருஷ்ணகிரியில் வாக்கு சேகரிக்கிறார்.
தனது தம்பி சுதீஷ் போட்டியிடும் கள்ளக்குறிச்சி தொகுதியில் மே 8, 9, 10 ஆகிய மூன்று நாட்கள் பிரசாரம் செய்கிறார். இந்த மூன்று நாட்களும் தெருத் தெருவாக சென்று தம்பிக்கு வாக்கு சேகரிக்கவுள்ளார்.
கடைசியாக 11ம் தேதி புதுச்சேரியில் பிரசாரம் செய்து தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications