ரேஷன்-முதல்வர் படம் மீது வெள்ளை ஸ்டிக்கர்
மதுரை: ரேஷன் கடைகளில் அரிசி, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகப்படும் உறைகளில் உள்ள தமிழக முதல்வர் கருணாநிதியின் படத்தின் மீது வெள்ளை ஸ்டிக்கர் ஒட்டி வினியோகப்படுகிறது.
தேர்தல் விதிகள் அமுலுக்கு வந்ததை தொடர்ந்து தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக அரசு அலுவலகங்கள், ரேஷன் கடைகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு பஸ்கள் போன்றவற்றில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை உடனே அகற்ற உத்தரவிட்டது.
இதையடுத்து ரேஷன் கடைகளில் தமிழக அரசின் சார்பில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மீது தமிழக முதல்வரும், திமுக கட்சி தலைவருமான கருணாநிதியின் படம் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்த நிலையில், தமிழக ரேஷன் கடைகளில் வினியோகப்படும் மலிவு விலை பொருட்களின் உறைகளில் உள்ள தமிழக முதல்வரும், திமுக கட்சி தலைவருமான கருணாநிதியின் படத்தை மறைத்து, வெள்ளை ஸ்டிக்கர் ஒட்டி வினியோகப்படுகின்றது.
கைவசம் வேறு உறைகள் இல்லாததால் அதன் மீதை வெள்ளை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
தேர்தல் கமிஷனின் இந்த அதிரடி உத்தரவைக் கண்டு திமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications