டைட்லர், ஷஜ்ஜன் போட்டியில்லை-காங். அறிவிப்பு
டெல்லி: ஜெகதீஷ் டைட்லர், ஷஜ்ஜன் குமார் ஆகியோருக்கு எதிராக சீக்கியர்கள் கடும் போராட்டத்தில் குதித்திருப்பதையடுத்து அவர்கள் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட கலவரத்தில் தலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த கொலை செயலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகதிஸ் டைட்லருக்கு தொடர்பு இருப்பதாக நானாவதி கமிஷன் அறிவித்தது.
அதன்பின்னர் இந்த வழக்கை விசாரித்த சிபிஐ டைட்டலர் மற்றும் ஷஜ்ஜனை நிரபராதி என கூறி விடுவித்தது. இதையடுத்து டைட்லர் வடகிழக்கு டெல்லியிலும், ஷஜ்ஜன் தெற்கு டெல்லியிலும் போட்டியிடுவார்கள் என தெரிவித்தது.
இந்நிலையில் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஆவேசமடைந்த சீக்கிய நிருபர் ஜர்னைல் சிங், உள்துறை அமைச்சர் மீது ஷூவை வீசினார். இதை தொடர்ந்து டெல்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் நேற்று டைட்லர், ஷஜ்ஜன் ஆகியோர் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜனார்த்தன் திரிவேதி கூறுகையில், டைட்லர், ஷஜ்ஜன் தேர்தலில் போட்டியிட வேண்டாம் கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. அவர்கள் கட்சிக்காக உழைப்பார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய வேட்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications