திமுக 'ராமராஜன்' ரித்தீஷை எதிர்க்கும் சத்தியமூர்த்தி

வழக்கறிஞரான சத்தியமூர்த்திக்கு வயது 64. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஒருவானேந்தலைச் சேர்ந்தவர்.
1980ல் ஒரு முறையும், பின்னர் 1991ம் ஆண்டும் கடலாடி தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991ம் ஆண்டு இவர் திமுக சார்பில் நின்ற காளிமுத்துவை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த தேர்தலின்போது கருணாநிதி துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின்போது தம்பி காளிமுத்து நீ கடலாடி வா, நான் துறைமுகத்தில் நிற்கிறேன் என்று கருணாநிதி கூறியது அப்போது பிரபலமானது என்பது நினைவிருக்கலாம்.
1993ம் ஆண்டு முதல் 96 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்தார் சத்தியமூர்த்தி.
ராமநாதபுரத்தில் நடிகர் ரித்தீஷையும், வலுவான பாஜகவின் திருநாவுக்கரசரையும் எதிர்கொள்கிறார் சத்தியமூர்த்தி. எம்.எல்.ஏ, அமைச்சர் என இருந்த சத்தியமூர்த்தி எம்.பியாக முயற்சிக்கிறார்.












Click it and Unblock the Notifications