பருவத ராஜகுல மீனவர் சங்கம் திமுகவுக்கு ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சேலம்: பருவத ராஜகுல மீனவர் அறக்கட்டளை நிறுவனர் சாமிக்கண்ணு, உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில பருவத ராஜகுல மீனவர் சங்க நிர்வாகக்குழு கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பருவத ராஜகுல மீனவர் அறக்கட்டளை நிறுவனர் சாமிக்கண்ணு தலைமை வகித்தார்.
அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து வாக்களிப்பது, கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவளிக்கும் கடிதத்தை மாநில சங்க, அறக்கட்டளை நிர்வாகிகள் கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, ராஜகுல மீனவர் அறக்கட்டளை நிறுவனர் சாமிக்கண்ணு, உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications