தேமுதிக அண்ணனை எதிர்க்கும் அதிமுக தம்பி!

Subscribe to Oneindia Tamil

Sambath
சென்னை: கடலூர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் மு.சி.தாமோதரனை எதிர்த்து அதிமுக சார்பில் அவரது தம்பி மு.சி.சம்பத் போட்டியிடுகிறார்.

இருவருமே ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் தாமோதரன் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். பின்னர் அவர் தனது தம்பி சம்பத்தையும் அதிமுகவில் இணைத்தார்.

பின்னர் தாமோதரன் ஜெயலலிதாவின் நட்பு வட்டத்திலிருந்து விலகவே, அவரது இடத்திற்கு சம்பத் வந்தார்.

தற்போது கடலூர் தொகுதியில் தேமுதிக சார்பில் தாமோதரன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சம்பத்தை நிறுத்தியுள்ளார் ஜெயலலிதா.

மு.சி.சம்பத் ஜெயலலிதா அமைச்சரவையில், உள்ளாட்சித்துறை, வீட்டு வசதித்துறை ஆகிய துறைகளை வகித்து வந்தார்.

தாமோதரன் ஜெயலலிதாவின் முதலாவது அமைச்சரவையிலும், சம்பத், ஜெயலலிதாவின் கடைசி அமைச்சரவையிலும் அமைச்சர்களாக இருந்தவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+