யாரும் கூப்பிடல...10 தொகுதிகளில் தனித்து போட்டி
சென்னை: எந்தக் கூட்டணியிலும் கூப்பிடாததால், புதிய நீதிக் கட்சி தனித்துப் போட்டியிடப் போகிறது. 10 தொகுதிகளில் அவர்கள் போட்டியிடவுள்ளனர்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தோன்றிய கட்சி புதிய நீதிக் கட்சி. முதலியார், பிள்ளைமார் உள்ளிட்ட சமூகத்தினரை குறி வைத்து இந்தக் கட்சி தொடங்கப்பட்டது.
கடந்த தேர்தலில் அதிமுகவை இக்கட்சி ஆதரித்தது. இந்தத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தது. ஆனால் இதயத்தில் மட்டுமே இடம் கிடைக்கும் என்ற நிலை.
வேறு யாரும் கூட்டணிக்குக் கூப்பிடவில்லை. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய புதிய நீதிக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில், கட்சிக்கு பலம் வாய்ந்த அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம் ஆகிய 10 பாராளுமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அரக்கோணம் தொகுதிக்கு மாநில துணை பொதுச் செயலாளர் டபிள்யூ.பி.பழனி, திருவண்ணாமலை தொகுதிக்கு இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.ராஜாராம் ஆகியோரை வேட்பாளராக ஏ.சி.சண்முகம் அறிவித்தார்.
மீதமுள்ள 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மற்றும் 10 தொகுதிகள் போக மற்ற 30 தொகுதிகளில் யாருக்கு ஆதரவு என்பதை 15-ந் தேதிக்குள் அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications