இன்று காங்கிரஸ் முதல் பட்டியல்!
டெல்லி: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான முதல் பட்டியல் இன்று வெளியாகலாம் என்று தெரிகிறது.
இதில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிகத்தில் 15 தொகுதிகளிலும், புதுச்சேரி உள்ள ஒரே தொகுதியிலும் போட்டியிடும் காங்கிரஸ் சார்பில் களமிறங்க 880 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
இவர்களை மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு எம்.பி, தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகிய 5 பேர் கொண்ட குழு பரிசீலித்து தொகுதிக்கு மூவர் வீதம் பட்டியலை தயாரித்தது.
தங்களது கோஷ்டியைச் சேர்ந்தவர்களுக்கு இதில் அதிகபட்ச இடங்களை இவர்கள் தந்துள்ளனர். இந்தப் பட்டியலில் இருந்து வேட்பாளர்களை தேர்வு செய்ய பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் பொறுப்பை ஒப்படைத்தார் சோனியா.
இவர்கள் தமிழக ஐவர் குழுவுடன் பேசி பட்டியலை தயார் செய்து சோனியாவிடம் ஒப்படைத்தனர். இதை மத்திய தேர்தல் குழு பரிசீலித்து பட்டியலை முடிவு செய்துவிட்டது.
இந்தப் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மணிசங்கர் அய்யர், எம்பிக்கள் தங்கபாலு, பிரபு ஆகியோர் மீண்டும் இடம் பிடித்துவிட்டனர்.
இவர்கள் தவிர தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள சிலரது பெயர்களை கட்சி மேலிடம் நிராகரித்து விட்டதாகத் தெரிகிறது.
மேலும் இளைய தலைமுறையினர் மற்றும் புதியவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்குமாறு மத்திய தேர்தல் குழுவிடம் சோனியா காந்தி அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட்டது. இதனால் நேற்று வெளியாக இருந்த வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை.
இதையடுத்து மூத்த தலைவர்களின் பெயர் கொண்ட இன்று முதல் பட்டியல் வெளியாலாம் என்கிறார்கள். புதியவர்களின் பட்டியல் அடுத்த கட்டமாக வெளியாகலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications