கொங்கு இளைஞர் பேரவை 13ல் வேட்பாளர் பட்டியல்
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை வரும் ஏப்ரல் 13ம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என மாநிலத் தலைவர் தனியரசு அறிவித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல்லில் தனியரசு நிருபர்களிடம் கூறுகையி்ல்,
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு கொங்கு பேரவை 11 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கரூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை குறித்து முடிவு செய்துள்ளது.
மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம். அனைத்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் தேர்வு செய்துவிட்டு வரும் 13ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்போம் என்றார் தனியரசு.












Click it and Unblock the Notifications