தமிழக கூட்டணிக் கலாச்சாரம்-பிரேமலதா தாக்கு

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து கூடுவாஞ்சேரியில் தனது பிரச்சாரத்தை துவக்கிய பிரேமலதா மறைமலைநகர், செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூர் பகுதிகளில் பேசுகையில்,
இதுவரை எத்தனையோ பேர் இந்த தொகுதியில் போட்டியிட்டு உங்கள் தயவுடன் வெற்றி பெற்றனர். ஆனால் வெற்றி பெற்ற அவர்கள் உங்களுக்கு எதுவும் செய்யவில்லை.
சாலை வசதி வேண்டும் என்றும், பஸ் வசதி வேண்டும், குடிநீர் வசதி வேண்டும் என்று நீங்கள் எத்தனை முறை கோரிக்கை வைத்திருப்பீர்கள்.. இதுவரை நீங்கள் தேர்ந்தெடுத்த எம்பிக்கள் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றினார்களா?.
மின்வெட்டால் இந்த மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.
ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டு கேட்பதற்காக உங்களிடம் ஓடோடி வந்த ஆளுங்கட்சியும், ஏற்கனவே ஆண்ட கட்சியும் 5 வருடத்திற்கு உங்களை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
எம்பிக்களுக்கு என்று தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதியைக் கூட வாக்களித்த மக்களுக்காக பயன்படுத்தாத பல எம்பிக்கள் இருக்கின்றனர்.
இரண்டு திராவிட கட்சிகளும் கூட்டணி அமைத்து தங்கள் வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க வேண்டும். பின்னர் அவர்களை அமைச்சர்களாக்கி வசதியாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்களே தவிர மக்களை பற்றி நினைப்பதே இல்லை.
இப்போது தமிழ்நாட்டில் ஒரு கலாச்சாரம் நிலவி வருகிறது. எந்தக்கட்சி யாருடன் கூட்டணி வைத்தால் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று பேசுவதுதான் அந்தக் கலாச்சாரம்.
நம் தலைவர் (விஜயகாந்த்) மாவட்டம் தோறும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள அமைத்துள்ளார். மேலும் லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்ற திட்டத்தையும் அறிவித்து இதுவரை பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார்.
இதுபோன்று மக்களுக்கு நல்லது செய்யும் பணியை எம்.ஜி.ஆரைத் தவிர வேறு எந்தத் தலைவர்களாவது செய்கிறார்களா?.
ஆகவே வாக்காளர்களே நீங்கள் இந்த முறை வாக்களிக்கும்போது சிந்தித்து வாக்களியுங்கள். தேமுதிக மக்கள் கட்சி. மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். எங்கள் வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள். இந்த தொகுதியை தமிழ்நாட்டில் சிறந்த தொகுதியாக மாற்றிக் காட்டுகிறோம் என்றார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications