வாணியம்பாடி ஸ்டைலில் வேலூரில் இந்து வேட்பாளரை நிறுத்திய ஜெ.

வாணியம்பாடி சட்டசபைத் தொகுதிக்கு முன்பு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வடிவேலுவை நிறுத்தினார் ஜெயலலிதா. அவர் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
வேலூர் தொகுதியில், இந்துக்கள் 68 சதவீதம் பேர் உள்ளனர். இதில் முதலியார் சமூகத்தவர் 25 சதவீதம் பேரும், வன்னியர்கள் 23 சதவீதம் பேரும், தாழ்த்தப்பட்டோர் 20 சதவீதம் பேரும் உள்ளனர்.
முஸ்லீம்களின் வாக்கு சதவீதம் 32. எனவேதான் இந்தத் தொகுதியில் முஸ்லீம் வேட்பாளர்களே அதிகம் நிறுத்தப்படுவது வழக்கம்.
ஆனால் அதிரடியாக வாசு என்ற இந்துவை வேட்பாளராக நிறுத்தியுள்ளார் ஜெயலலிதா. இவர் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
பாமக தங்கள் பக்கம் இருப்பதால், வன்னியர்கள் மற்றும் முதலியார் சமூக வாக்குகளை இழுத்து விடலாம் என்ற கணக்கின் அடிப்படையில்தான் வாசுவை போட்டுள்ளார் ஜெயலலிதா.
முன்பு வாணியம்பாடியில் 2002ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் வடிவேலு நிறுத்தப்பட்டார். திமுக சார்பில் பிரபல பாடகர் நாகூர் ஹனீபா போட்டியிட்டார். மற்ற கட்சிகளும் கூட முஸ்லீம் வேட்பாள்களையே நிறுத்தின.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், வடிவேலு வென்றார். அவருக்கு அமைச்சர் பதவியையும் கொடுத்தார் ஜெ.
தற்போதும் வாணியம்பாடி ஸ்டைலில் வாசுவை நிறுத்தியுள்ளார் ஜெயலலிதா.
48 வயதாகும் வாசு, பி.காம். பட்டம் பெற்றுள்ளார். வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர். வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர். டிரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு கீதா என்ற மனைவியும், பாக்கியா, தீபா, திவ்யா என்ற மகள்களும் உள்ளனர்.
வாணியம்பாடி வெற்றியை வேலூரில் ரிப்பீட் செய்வாரா வாசு என்பதைப் பார்க்க வேண்டும்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications