ஈழத் தமிழர்களுக்காக தேமுதிக கூட்டு பிரார்த்தனை
சென்னை: இலங்கை தமிழர்களை அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். அவர்களின் நலனுக்காக வரும் 14ம் தேதி சார்பில் தேமுதிகவினர் கூட்டு பிரார்த்தனை செய்வார்கள் என கட்சி தலைவர் விஜயகாந்த தெரிவித்துள்ளார்.
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேமுதிகவினர் இலங்கை தமிழர்களுக்காக மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் இருந்தனர். அறிவழியில் போராட்டம் நடத்தினர்.
சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டு இலங்கை ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. லட்சக்கணக்கான தமிழர்களை இடம் பெயரச் செய்து துன்புறுத்திகிறது. தற்போது யுத்தப்பகுதியில் இருக்கும் சுமார் 1 லட்சம் தமிழ் மக்களை சுட்டுகொன்று மிகப்பெரிய மனித பேரழிவை இன்னும் சில நாட்களில் நடத்தவுள்ளது.
தமிழக அரசோ முதல்வர் கருணாநிதி தலைமையில் பேரணி நடத்துவதும், மத்திய அரசுக்கு மனுபோடுவதும், இலங்கை இறையாண்மையில் இந்திய அரசு தலையிட முடியாது என்றும் தெரிவிக்கிறது.
சோனியாகாந்தி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி போல் செயல்பட வேண்டுமென்று கூறிவிட்டு, தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அடையாளப்படுத்தி கொண்டார்.
விமான சேவையை நிறுத்து...
இலங்கை அரசுக்கு எதிர்ப்பு காட்டும் வகையில் இந்திய அரசு விமான போக்குவரத்தை நிறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இந்திய அரசும், தமிழக அரசும் செயல்படாத நிலையில் தமிழினத்திற்கு மிகப்பெரிய வரலாற்று துரோகத்தை இழைத்து வருகின்றன. ஒருபுறத்தில் ஐயோ என்று கதறும் இலங்கை தமிழ் மக்கள், மறுபுறத்தில் ரத்த கண்ணீர் மட்டுமே வடிக்கும் தமிழ்நாட்டு மக்கள்.
இலங்கை தமிழர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்...
இலங்கை தமிழ் மக்களை காப்பாற்ற எனக்கு தெரிந்த ஒரேவழி, கடவுளிடம் வேண்டுவது தான். இனி ஆண்டவன் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.
இலங்கை தமிழ் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஏப்ரல் 14ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணிக்குள் தமிழ்நாட்டு மக்கள் இலங்கை தமிழர்களுக்காக கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆலயங்களிலும், மசூதிகளிலும், மாதாகோவில்களிலும் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் பெருமளவில் இந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு தங்கள் ஒற்றுமையையும், உணர்வையும் உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்ரு கேட்டுக்கொள்கிறேன். 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்பது பழமொழி என்றார் விஜயகாந்த்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications