அதிமுக: தலித்-முஸ்லீம் அதிருப்தி; மேலும் சில வேட்பாளர்கள் மாற்றம்?-நீலகிரியிலும் போட்டி!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே உள்ளன. மனு தாக்கல் 24ம் தேதியோடு முடிவடையவுள்ளது.
இந் நிலையில் அதிமுகவில் திருவள்ளூர், பெரம்பலூர் வேட்பாளர்களை அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாற்றியுள்ளார்.
இந் நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியலில் தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய தனி தொகுதிகளை மட்டுமே அதிமுக தன் வசம் வைத்துக் கொண்டு தலித் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
நீலகிரி தனி தொகுதியை மதிமுகவிடமும், சிதம்பரம் தனி தொகுதியை பாமகவிடமும், நாகப்பட்டிணம் மற்றும் தென்காசி ஆகிய தனி தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடமும் தந்துவிட்டது.
மேலும் கூட்டணியில் எந்த முஸ்லீம் கட்சியையும் சேர்க்காத நிலையில் 23 பேர் கொண்ட தனது வேட்பாளர் பட்டியலிலும் ஒரு இஸ்லாமியருக்கும் சீட் தரவில்லை.
இதனால் அந்த சமுதாயத்தினரின் திமுக எதிர்ப்பு வாக்குகள் பிற கட்சிகளுக்குப் போய்விடும் சூழல் நிலவுவதாக அதிமுகவினரே கூறுகின்றனர்.
முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் வேலூர், மத்திய சென்னை, மயிலாடுதுறை ஆகிய மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதியில், முஸ்லிம் வேட்பாளரையாவது நிறுத்த வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கூறப்பட்டுள்ளது.
அவரும் இது குறித்து பரிசீலனை செய்து வருவதாகத் தெரிகிறது. இதனால் இந்தத் தொகுதிகளில் சிலவற்றில் வேட்பாளர் மாற்றம் இருக்கலாம்.
அதே போல விழுப்புரம், திருச்சி, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களும் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்க்க வலுவான வேட்பாளரை நிறுத்த ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் வேட்பாளர் எஸ்.எஸ்.சந்திரன் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
நீலகிரியை திரும்பப் பெறலாம்...
அதே போல நீலகிரி தொகுதியை அதிமுக எடுத்துக் கொண்டு மதிமுகவுக்கு வேறு தொகுதியை ஜெயலலிதா தரலாம் என்கிறார்கள்.
இந்தத் தொகுதியின் வேட்பாளரான மத்திய அமைச்சர் ராசாவை நாமே எதிர்கொள்ள வேண்டும் என அதிமுக கருதுவதாகத் தெரிகிறது.
இநத்த் தொகுதியை அதிமுக பெற்றால் அங்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும். இதன்மூலம் தலித்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை என்ற குறையையும் போக்கலாம் என்று ஜெயலலிதா கருதுவதாகத் தெரிகிறது.
நீலகிரி தொகுதியை மதிமுக விருப்பமே இல்லாமல் தான் ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதை வாங்கிக் கொண்டு காஞ்சிபுரத்தைத் தந்தால் மகிழ்ச்சியோடு ஏற்போம் என்கிறது மதிமுக வட்டாரம்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications