பாஜக..பாடாய் படுத்தும் சரத்-கார்த்திக்-கிருஷ்ணசாமி
சென்னை: கூட்டணி விஷயத்தில் தமிழகத்தில் பாஜக பாடதபாடுபட்டு வருகிறது.
பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாகக் கூறிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக் ஆகியோர் பலமுறை கூப்பிட்டும் முறையாகப் பேச்சு நடத்த வரவில்லை.
அதே போல டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகமும் கூட்டணி அமைக்க தயாராக இல்லை. தான் போட்டியிடும் தென்காசி தொகுதியில் மட்டும் பாஜகவின் ஆதரவைக் கேட்கிறார்.
இருப்பினும் இந்த நான்கு கட்சிகளும் கூட்டணி குறித்துப் பேசி வருவதாகக் கூறிக் கொண்டே இருக்கின்றன. ஆனாலும் எந்த முடிவும் ஏற்படவில்லை.
சமத்துவ மக்கள் கட்சியுடன் பேச்சு வார்த்தை தொடருவதாக பாஜக கூறுகிறது. ஆனால், இது குறித்து சரத்குமார் எதுவுமே கூறவில்லை.
இதற்கிடையே சமத்துவ மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சியுடனும் பேசி வருகிறது. ஆனால், பாஜக கூட்டணியில் இணைந்தால் நாங்கள் சேர முடியாது என மனித நேயக் கட்சி சரத்திடம் கூறிவிட்டது.
சரத்தாவது பரவாயில்லை. கார்த்திக்கோ பாஜக, சரத்குமாருடன் ஆகியோருடன் கூட்டணி பேச்சு நடத்தி வருவதாகக் கூறிக் கொண்டே எந்த ஒரு ஒப்பந்தமும் ஏற்படாத நிலையில் 7 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக பட்டியலை அறிவித்துவிட்டார்.
இது பாஜக தரப்புக்கு ஷாக். இந் நிலையில் சரத்குமார் சட்டென்று தனது நிலையை தெளிவாக்காவிட்டால் தனித்தே களமிறங்க பாஜகவும் தயாராகிவிட்டது.
சரத், கார்த்திக், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் எடுக்கும் எந்த முடிவையும் 'தாங்கிக் கொள்ள' தயாராகி விட்டது. ஏற்கனவே குறிப்பிட்ட சில தொகுதிகளை தேர்வு செய்து அத்தோடு வேட்பாளர் பட்டியலையும் தயார் செய்து டெல்லிக்கு அனுப்பிவிட்டது பாஜக.
நாளைக்குள் கூட்டணி ஏதும் சரிப்பட்டு வராவிட்டால் தனது பட்டியலை வெளியிடவும் அந்தக் கட்சி தயார்.
இதற்கிடையே இன்று மாலைக்குள் யாருடன் கூட்டணி என்பதை சரத்குமார் அறிவித்துவிடுவார் என்கிறார்கள். இன்றோ நாளையோ வேட்பாளர் பட்டியலையும் வெளியிடவுள்ளாராம்.
கூட்டணியோ இல்லையோ சரத்குமார் நெல்லை தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications