அழகிரி: டோக்கன் போட்டு பணம் பட்டுவாடா-சிபிஎம் புகார்
மதுரை: மதுரை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முக அழகிரிக்கு ஆரத்தி எடுக்கும் மக்களுக்கு டோக்கன் போட்டு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக சிபிஎம் குற்றம்சாட்டியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தொகுதியில் அதிக பரபரப்பாக பேசப்பட்டு வரும் தொகுதி மதுரை தொகுதி தான். இதற்கு திமுக தென்மாவட்ட அமைப்பாளர் முக அழகிரி அங்கு போட்டியிடுவது தான் காரணம். இவருக்கு எதிராக அதிமுக கூட்டணி சார்பில் சிபிஎம் கட்சியை சேர்ந்த மோகன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் எதிர்கட்சிகள் தொடர்ந்து திமுகவினர் புகார் தொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மேலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த அழகிரிக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு திமுகவினர் டோக்கன் கொடுத்ததாகவும், அழகிரி அந்த இடத்தை விட்டு சென்ற பின்னர் திமுகவினர் சிலர் மீண்டும் வந்து டோக்கனை வாங்கிகொண்டு ரூ. 100 கொடுத்ததாகவும் சிபிஎம் புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சிபிஎம் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் அண்ணாதுரை கூறுகையில்,
மதுரை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முக அழகிரி சனிக்கிழமை மேலூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஆரத்தி எடுத்த பெண்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன.
பிரசாரம் முடிந்து அழகிரி சென்றபின் அந்த டோக்கன்களுக்கு திமுகவினர் தலா ரூ.100 வழங்கி உள்ளனர். இது தேர்தல் நடைமுறை விதிகளுக்கு முரணானதாகும். இந்த விதிமீறலைத் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் ரா.அண்ணாதுரை.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications