தேர்தல் விதிமுறை மீறல்-நெல்லையில் 27 வழக்கு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் விதிமுறைகளை நடைமுறைக்கு வந்துள்ளது.இதன்படி மாநகர, நகர தனியார் இடங்களிலோ, பொது இடங்களிலோ எந்த வித விளம்பரமும் செய்யக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் தனியார் சுவர்களில் அதன் உரி்மையாளர்களிடம் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் டிஐஜி கண்ணப்பன் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டன்ட் ஆஸ்ரா கர்க் மேற்பார்வையில் விதிமுறைகளை மீறிதேர்தல் விளம்பரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் மொத்தம் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் 6 வழக்குகள் இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியாக திமுக மீது 5 வழக்குகளும், தேமுதிக மீது 5 வழக்குகளும் மனித நீதி பாசறை மீது 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications