தாய்லாந்தில் கலவரம்...ஆசியன் மாநாடு ஒத்திவைப்பு
பாங்காங்: தாய்லாந்து பிரதமர் பதவி விலக வேண்டும் என அங்குள்ள எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதையடுத்து ஏற்பட்ட கலவரம் காரணமாக இன்று தொடங்குவதாக இருந்த இந்தியா மற்றும் ஆசியன் கூட்டமைப்பு மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆசியன் நாடுகள் கூட்டமைப்பு பங்கேற்கும் மாநாடு இன்று தாய்லாந்தில் உள்ள பட்டாயா நகரில் துவங்குவதாக இருந்தது. இதில் பங்கேற்க இந்தியா சார்பில் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கமல்நாத் அங்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் தாய்லாந்து பிரதமர் அபிஷித் வெஜ்ஜாஜிவாவுக்கு எதிராக அங்கு போராட்டம் வெடித்துள்ளது. அவர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவர் தான் பங்கேற்கும் கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
இதை தொடர்ந்து நேற்று அவர்கள் பட்டாயா நகரில் மாநாடு நடக்கவிருந்த இடத்துக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கிருந்த கண்ணாடிகள் சிலவற்றை அடித்து நொறுக்கினார். பாதுகாப்பு படையினரால் அவர்களை தடுக்க முடியவில்லை. கூட்டம் நடைபெறும் அறை வரை அந்த கலவரக் கும்பல் முன்னேறியது.
பின்னர் அவர்கள் கூட்டத்துக்கு வந்த தாய்லாந்து தலைவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களை முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீசார் புடைசூழ தலைவர்கள் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து தாய்லாந்து பிரதமர் அபிஷித் மாநாடு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து தாய்லாந்துக்கான இந்திய தூதர் லதா ரெட்டி கூறுகையில், இந்திய பிரதிநிதிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications