காங்-203, பாஜக-191; திமுக அணி-25, அதிமுக அணி-14: ஸ்டார் நியூஸ் கருத்துக் கணிப்பு
டெல்லி: ஸ்டார் டிவி- ஏசி நீல்சன் எடுத்த கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி இம்முறை 25 இடங்களி்ல் வெல்லும் என்றும், அதிமுக கூட்டணி 14 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஸ்டார் நியூஸ்-நீல்சன் நடத்திய 2வது கருத்துக் கணிப்பு முடிவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 203 இடங்களும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 191 இடங்களும் கிடைக்கும்.
இடதுசாரிகள் தலைமையிலான மூன்றாவது அணிக்கு 104 இடங்களும் லாலு பிரசாத், முலாயம் சிங், ராம்விலாஸ் பாஸ்வான் அமைத்துள்ள நாலாவது அணிக்கு 39 இடங்களும் கிடைக்கும்.
மார்ச் 26 முதல் ஏப்ரல் 3 வரையில் நாட்டின் எல்லா பகுதிகளிலும் 50,400 வாக்காளர்களைச் சந்தித்து கருத்து கேட்டதன் பிறகு இந்த முடிவுகள் கிடைத்துள்ளன.
ஸ்டார்- ஏசி நீல்சன் நடத்திய முதல் கருத்துக் கணிப்பை விட தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணிக்கு இடம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், மூன்றாவது அணிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் பெருகியுள்ளன. 4வது அணிக்கும் இடங்கள் கூடுதலாகியுள்ளன.
முதல் கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கூட்டணிக்கு 257 இடங்களும், பாஜக கூட்டணிக்கு 184 இடங்களும், மூன்றாவது அணிக்கு 96 இடங்களும், மற்றவர்களுக்கு 6 இடங்களும் கிடைக்கும் என்று தெரிய வந்தது.
திமுகவுக்கு 15 கிடைக்கும் ..
இரண்டாவது கருத்துக் கணிப்பின்படி திமுகவுக்கு 15 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முதல் கருத்துக் கணிப்பில் இந்தக் கூட்டணிக்கு 24 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் 155, திரிணமூலம காங்கிரஸ் 13, தேசியவாத காங்கிரஸ் 11, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய மாநாடு, எம்.யு.எல். ஆகியவற்றுக்கு தலா 2, மஜ்லிஸ், கேரளா காங்கிரஸ், இந்திய குடியரசுக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் கிடைக்கும்.
பாஜக அணியைப் பொறுத்தவரை, பாஜக, 147, ஐக்கிய ஜனதா தளம் 22, சிவசேனா 9, அகாலி தளம் 5, அசாம் கண பரிஷத் 4, ஆர்.எல்.டி. 3, ஐ.என்.எல்.டி. 1 இடம் கிடைக்கும்.
அதிமுகவுக்கு 9..
3வது அணியில் பகுஜன் சமாஜ் 26, இடதுசாரிகள் 25, தெலுங்கு தேசம் 13, பிஜு ஜனதா தளம் 9, அதிமுக 9, மற்ற கட்சிகளுக்கு 23 கிடைக்கும்.
தமிழரகத்தில் அதிமுக கூட்டணிக்கு 14 இடங்கள் கிடைக்கும்.
சிரஞ்சீவிக்கு 1 ..
நான்காவது அணியைப் பொறுத்தவரை, சமாஜ்வாடி 28, ஆர்.ஜே.டி. 6, பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்கு 4, சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications