அரசு தேர்வையும் விட்டு வைக்காத தேர்தல்
நெல்லை: தமிழ்நாடு அரசு குரூப் 1 தேர்வில் தேர்தல் மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகள் வழக்கத்தை விட அதிகமாக கேட்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் நேற்று 32 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடந்தது. துணை கலெக்டர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பல முக்கிய பணியிடங்களை நிரப்புவதற்கு இத்தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வரும் மே 13ம் தேதி நடக்கவிருப்பதை அடுத்து தமிழகம தேர்தலுக்கு விறுவிறுவென தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையி்ல நேற்று நடந்த குரூப் 1 தேர்வி்லும் தேர்தலின் தாக்கத்தை காணமுடிந்தது. பொருத்துக பிரிவில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் சின்னம் எது என கேட்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற தேர்தலில் முதன்முதலாக அதிமுக வெற்றி பெற்ற தொகுதி, கடைசி பொது தேர்தலில் திமுக வெற்றி பெற்ற இடங்கள், 2000ம் ஆண்டில் தேர்தல் ஆணயைம் எந்த கட்சியின் அந்தஸ்தை நீக்கியது போன்ற கேள்விகள் தேர்வு எழுதியவர்களின் அரசியல் அறிவை கூர்தீட்டியது.
மேலும், தேசிய அரசியல் சார்ந்த சில கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தது. எதிர்பாராத இந்த கேள்விகள் தேர்வு எழுதியவர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications