உடனே விலக விரும்புகிறேன்! -கிரன் கார்னிக்

சத்யம் நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை ரூ. 2890-க்கு (வெளிச் சந்தையில் வாங்கவிருக்கும் 20 சதவிகித பங்குகளுக்கான மதிப்பும் சேர்த்து) வாங்கியுள்ளது டெக் மஹிந்திரா நிறுவனம்.
இதனைத் தொடர்ந்து சத்யம் நிறுவனத்தின் புதிய அதிபராகிறது டெக் மஹிந்திரா. நிர்வாகம் இனி இவர்கள் வசமே.
தற்போது அரசு நியமித்த இயக்குநர் குழுதான் சத்யம் நிர்வாகத்தை கவனிக்கிறது. இந்த நிர்வாகக் குழுவின் தலைவராக கிரன் கார்னிக் உள்ளார்.
சத்யம் பெரும்பான்மைப் பங்குகள் கைமாறியதைத் தொடர்ந்து கிரன் கார்னிக் அளித்த பேட்டி:
"இப்போதுதான் நிம்மதியாக உணர்கிறேன். சத்யம் நிர்வாகப் பொறுப்பை எவ்வளவு சீக்கிரம் முடியுமா அவ்வளவு சீக்கிரம் டெக் மஹிந்திரா வசம் ஒப்படைத்துவிட்டு, வெளியேறிவிட வேண்டும் என்பதே என் விருப்பம். இனி இந்த ஷோவை அவர்கள் நடத்தட்டும். புதிய நிர்வாகத்துக்கு இப்போதே வாழ்த்துக்களைச் சொல்லி வைக்கிறேன்", என்றார் கிரன் கார்னிக்.
மூன்று மாத வருவாய் ரூ.2000 கோடி!!
மேலும் அவர் கூறுகையில், "சத்யம் இப்போதும் நல்ல நிறுவனம்தான். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் அந்த நிறுவனம் ரூ.2000 கோடியை வருவாயாகப் பெற்றுள்ளது. காரணம் அவர்களுக்குள்ள வாடிக்கையாளர் பலம் அப்படி. சத்யம் நிறுவனத்தை நடத்த வேறு நிதி உதவிகள் கூடத் தேவை இல்லை. இந்த வருவாய் தொடர்ந்தாலே போதும், நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்கும். இப்போது தேவை வலுவான நிலையான நிர்வாகம் மட்டுமே. அரசு எங்களுக்களித்த பொறுப்பை சரியாக நிறைவேற்றிவிட்டோம்," என்றார்.
சில வழக்கமான நடைமுறைகளை முடித்த பிறகு ஏப்ரல் 21-ம் தேதி அல்லது அதற்குப் பிந்தைய நாளில் சத்யம் நிறுவனத்தை முழுமையாக டெக் மஹிந்திரா ஏற்கும் எனத் தெரிகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications