2 நாட்களில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் - தங்கபாலு
சேலம்: தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் 2 நாளில் அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி டெல்லியில் இதனை முறைப்படி அறிவிப்பார்.
இதில் நல்ல வேட்பாளர்கள், மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் இடம் பெறுவார்கள்.
கன்னியாகுமரி தொகுதியில் எந்தவித பிரச்சனையும் இல்லை. காங்கிரசார், தமிழகம் முழுவதும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடுவார்கள்.
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய உள்ளேன்.
தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் சோனியாகாந்தி தான் முடிவு செய்வார் என்றார்.