நெல்லையில் ராட்சத முரசு-தேமுதிகவினர் உற்சாகம்
நெல்லை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டுவதற்கும், தங்களது முரசு சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்கவும் நெல்லையில் ராட்சத முரசு ஒன்றை தேமுதிக உருவாக்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் பொதுவான சின்னம் இல்லாமல் கிடைத்த சின்னத்தில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு இம்முறை தேர்தல் ஆணையம் அவர்கள் கேட்ட முரசு சின்னத்தை வழங்கி உற்சாகம் தந்துள்ளது.
இந்நிலையில் தேமுதிகவினர் தங்களது கட்சி சின்னமான முரசை மக்கள் மனதில் நன்கு பதிய வைக்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் திரைப்பட கலைஞர்கள் கைவண்ணத்தில் உருவான இந்த ராட்சத முரசு நெல்லை தொகுதி முழுவதும் மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளது. இதற்காக மினி லாரியின் பின்பக்கத்தில் முரசு வைக்கப்பட்டுள்ளது. இந்த முரசின் உயரம் 4 அடியாகும். சுற்றளவு 8 அடி என்கின்றனர் தேமுதிகவினர்.
இந்த ராட்சத முரசு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் இரவில் முரசு மட்டும் பளிச் என தெரியும். மேலும் இந்த வாகனத்தில் தேமுகவினர் சாதனைகள் மற்றும் தேர்தல் அறிக்கை ஓலி பெருக்கி முலம் அறிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே இது வித்தியாசமான பிரசாரமாக இருக்கும் என மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications