பொய்யால் சீட் இழந்த விழுப்புரம் அதிமுக வேட்பாளர்

சமீபத்தில் திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜனை மாற்றி இன்பராஜை வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா.
ராஜன் மாற்றப்பட்டதற்குக் காரணம் அவர் தலித் கிறிஸ்தவர் என்பதால். திருவள்ளூர் தனி தொகுதி என்பதால் அங்கு இந்து தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே போட்டியிட முடியும்.
ஆனால் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இன்பராஜும் ஒரு தலித் கிறிஸ்தவர் என்று பின்னர் தெரிய வந்ததால் அவரையும் மாற்றி விட்டு இப்போது டாக்டர் வேணுகோபால் வேட்பாளராகியுள்ளார்.
இந்த நிலையில் விழுப்புரம் தனி தொகுதி வேட்பாளரான முருகனையும் நேற்று மாற்றி முன்னாள் அமைச்சர் ஆனந்தனை வேட்பாளராக்கினார் ஜெயலலிதா.
முருகன் நீ்க்கப்பட்டதற்கு அவர் சொன்ன சில பொய்களும், அவர் மீது உள்ள பல குற்றச்சாட்டுக்கள், வழக்குகளுமே காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
முருகனுக்கு தமிழகத்திலும், புதுவையிலும் என இரண்டு இடங்களில் வாக்குரிமை உள்ளதாம். இதை கட்சியில் தெரிவிக்காமல் மறைத்து விட்டார்.
அதிமுகவில் இருந்து கொண்டே புதுச்சேரி மாநிலம் ஊசுடு சட்டசபைத் தொகுதியில், அவர் கடந்த 1996ம் ஆண்டு தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 192 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதையும் சொல்லாமல் மறைத்து விட்டார்.
இதை விட ஜெயலலிதாவை பெரும் டென்ஷனாக்கியது, 1983ம் ஆண்டிலிருந்தே தான் அதிமுகவில் இருப்பதாக முருகன் கூறியதுதான்.
அதை விட ஜெயலலிதாவை மேலும் டென்ஷனாக்கிய பொய் என்னவென்றால்- அதிமுக பிளவுபட்டபோது நான் உங்களது தலைமையிலான அணியில் இருந்தேன் என்று முருகன் கூறியதுதான்.
இந்தப் பொய்களையெல்லாம் சென்னையில் நடந்த நேர்காணலின்போது முருகனே நேரடியாக ஜெயலலிதாவிடம் கூறியவை. இதனால்தான் கடுப்பாகி முருகனை தூக்கி விட்டார் ஜெயலலிதா.
இதுதவிர முருகன் மீது ஏகப்பட்ட வழக்குகளும் இருக்கிறதாம். எல்லாமாக சேர்ந்து அவரது சீட்டுக்கு 'கோவிந்தா' போட்டு விட்டன.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications