மீண்டும் 11,000 புள்ளிகளை தொட்ட சென்செக்ஸ்!
மும்பை: முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான வாங்கும் ஆர்வம் காரணமாக இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகம் இன்றும் ஏறுமுகத்தில் இருந்தது.
கிட்டத்தட்ட 200 நாட்கள் ஏறுவதும் இறங்குவதுமாக கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்த சென்செக்ஸ் ஒரு வழியாக இப்போதுதான் ஒரு நிலைக்கு வந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தின் ஆரம்பத்தில் 89 புள்ளிகளுக்கும் மேல் இழந்த சென்செக்ஸ், அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் களை கட்டியது.
டாடா மோட்டார்ஸ், ரான்பாக்ஸி லாபரட்டரீஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பிஎச்இஎல், கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனப் பங்குகள் நல்ல லாபத்தில் கைமாறின.
பிற்பகல் 12 மணிக்குப் பிறகு சென்செக்ஸ் 11 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. இந்த ஓராண்டில் பெரும்பாலும் வீழ்ச்சிகளை மட்டுமே பார்த்து வந்த பங்கு முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது இந்த போக்கு.
குறிப்பாக மிட்கேப் பிரிவில் லங்கோ இன்ப்ரா, டெக்கன் க்ரானிக்கிள், குஜராத் மினரல் டெவலப்மெண்ட் கார்ப்பொரேஷன், நிர்மா, பஞ்சாப் லாயிட் போன்றவற்றின் பங்கள் பெரும் லாபத்தில் விற்பனையாகின.
இன்றைய வர்த்தகத்தில் நஷ்டம் கண்ட பங்குகள்:
இன்போஸிஸ் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி வங்கி மற்றும் விப்ரோ.
ஸ்மால் கேப் பிரிவில் சிஎம்சி லிட் 37 சதவிகித லாபத்தில் கைமாறியது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இன்று நல்ல ஏற்றம். 101 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டது இன்று.
வர்த்தக நேர முடிவில் குறியீட்டெண் நிலைகள்: சென்செக்ஸ்- 11284.73 (317.51), நிப்டி- 3484.15 (101.55)
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications