அத்வானி ஒரு ஆர்.எஸ்.எஸ். அடிமை-சோனியா தாக்கு

கர்நாடக மாநிலம் பீதர் நகரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று பிரசாரம் செய்தார்.
அப்போது அத்வானியை அவர் கடுமையாக சாடினார். சோனியா காந்தியின் உத்தரவு இல்லாமல் மன்மோகன் சிங் எந்த முடிவையும் எடுக்க மாட்டார் என அத்வானி கூறியதற்குப் பதிலடியாக அவரது பதில் இருந்தது.
சோனியா காந்தி பேசுகையில், எல்.கே.அத்வானி ஒரு ஆர்.எஸ்.எஸ். அடிமை. ஆர்.எஸ்.எஸ் குறித்த சிந்தனை இல்லாமல் எந்த முடிவையும் அவரால் எடுக்க முடியாது.
உண்மையில் அத்வானிதான் அடிமை ஆவார். கட்சியில் தனது நிலைமையைக் காப்பாற்றிக் கொள்ள அவர் ஆர்.எஸ்.எஸ்ஸுக்குப் பயந்தாக வேண்டியுள்ளது. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ்.சின் ஒவ்வொரு விருப்பத்தையும் அவர் நிறைவேற்ற விழைகிறார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை பலவீனமானவர் என்று அத்வானி கூறி வருவது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அதை பொருட்படுத்தவே தேவையில்லை. உருப்படாத பேச்சு அது.
இப்படிக் கூறும் அத்வானியால், ஆர்.எஸ்.எஸ். பயம் இல்லாமல் ஏதாவது ஒரு முடிவையாவது எடுக்க முடியுமா..
அத்வானி பாஜக தலைவராக இருந்தபோது பாகிஸ்தானுக்குச் சென்று ஜின்னாவுக்கு நற்சான்றிதழ் கொடுத்து விட்டு வந்தார். ஆனால் இங்கு வந்ததும், ஆர்.எஸ்.எஸ். எழுப்பிய போர்க்குரலைத் தொடர்ந்து தனது கருத்திலிருந்து பின் வாங்கினார். அவரது கட்சிப் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.
பிரதமர் என்பவர் ஒரு கட்சிக்கு சொந்தமானவரல்ல. மாறாக, நாட்டுக்கே சொந்தமானவர். அவரை அவமானப்படுத்துவது என்பது ஒட்டுமொத்த நாட்டையும் அவமானப்படுத்துவது போலாகும். இதை அத்வானி நினைவில் கொள்ள வேண்டும்.
யார் பலவீனமானவர்கள், அத்வானியா, மன்மோகன் சிங்கா என்பதை மக்கள் தீர்மானிக்கும் நேரம் வந்து விட்டது. அவர்கள் சரியாக தீர்மானிப்பார்கள் என்றார் சோனியா காந்தி.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications