உதயசூரியன் தாலி - விருத்தாச்சலம் அருகே வினோத கிராமம்
விருத்தாச்சலம்: பெண்கள் புனிதமாக கருதும் தாலியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தைப் பதிக்கும் வினோத கிராமம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தாலியில் தங்களது குடும்ப தெய்வங்களை பதிப்பது தமிழக மக்களின் வழக்கம். ஆனால் விருத்தாச்சலம் அருகே உள்ள எம். பட்டி கிராம மக்கள் இதில் வித்தியாசப்படுகிறார்கள்.
இந்தக் கிராமமே தீவிர திமுகவினரைக் கொண்டதாகும். இங்குள்ள பெண்களுக்கு ஆண்கள், தாலியில், உதயசூரியன் சின்னத்தைப் பதிக்கும் பழக்கம் நெடுங்காலமாக உள்ளது.
இங்குள்ள திருமணமான பெண்களின் கழுத்தில் தொங்கும் தாலியில் உதயசூரியன் சின்னம் தவறாமல் இடம் பெற்றிருக்கும்.
கட்சியின் மீதும், உதயசூரியின் மீதும் கொண்ட அன்பால், தங்களது கிராமத்தில் நடைபெறும் திருமணங்களில் தாலியில், கண்டிப்பாக உதயசூரியன் சின்னத்தைப் பதித்து வருகிறார்கள் இந்த ஊர் ஆண்கள்.
இன்று நேற்றல்ல, 1957ம் ஆண்டு (திமுகவுக்கு அப்போதுதான் உதயசூரியன் சின்னம் கிடைத்தது) முதலே இந்தப் பழக்கம் இருந்து வருகிறதாம்.
எம்.பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர்தான் இதை ஆரம்பித்து வைத்தார். அன்றஉ முதல் கடந்த 3 தலைமுறையாக இது அங்கு நடைமுறையில் உள்ளது.
தற்போது சுப்ரமணியனுக்கு 74 வயதாகிறது. 1952ம் ஆண்டு இவர் திமுகவில் சேர்ந்தார். அவர் அறிமுகப்படுத்தி வைத்த உதயசூரியன் தாலி இன்று இக்கிராமத்தில் நிரந்தரமாகி விட்டது.
கருணாநிதியும், கண்ணதாசனும், சுப்ரமணியனுக்கு இரு கண்கள் போலவாம். இருவரின் பேச்சும், எழுத்தும் தன்னை வெகுவாக கவர்ந்ததாக கூறும் சுப்ரமணியன், உதயசூரியன் பொறித்த தாலிகளை அறிமுகப்படுத்தியதற்காக பெருமைப்படுவதாக கூறினார்.
தற்போது எம்.பட்டி கிராமத்தில் உள்ள பெரும்பாலான பெண்களின் (வெளியூர்ப் பெண்களின் கழுத்தில் வழக்கமான தாலியே இருக்கிறது) கழுத்தில் தொங்கும் தாலிகளில் உதயசூரியன் பட்டொளியுடன் பிரகாசிப்பதை காண முடியும்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications