அதிமுக வேட்பாளர்கள் 20ம் தேதி ஒட்டுமொத்தமாக மனு தாக்கல்
சென்னை: அதிமுக வேட்பாளர்கள் 23 பேரும் வருகிற 20ம் தேதி மொத்தமாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
இதில் அதிமுக 23 தொகுதிகளிலும், பாமக 7, மதிமுக 4, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. இதில் அதிமுக இரண்டு முறை வேட்பாளர்களை மாற்றியது.
இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 17ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் அன்றும், 18ம் தேதியும் அஷ்டமி வருகிறது. 19ம் தேதி நவமி. எனவே 20ம் தேதி முதல்தான் வேட்பு மனு தாக்கலை வேட்பாளர்கள் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கேற்ப அதிமுக வேட்பாளர்கள் 23 பேரும் வருகிற 20ம் தேதி மொத்தமாக வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
20ம் தேதி காலை 11.45 மணியில் இருந்து 12.15 மணிக்குள் வேட்பு மனுதாக்கல் செய்யுமாறு வேட்பாளர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாம்.
ஏற்கனவே ஜாதகம் பார்த்துதான் அதிமுக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது மனுத்தாக்கலுக்கான நேரத்தையும் அதிமுக தலைமையே குறித்துக் கொடுத்துள்ளது.
வருகிற 16ம் தேதி அதிமுக பிரசாரம் தொடங்குகிறது. சென்னையில் இந்தப் பிரசார தொடக்க விழா கூட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து 18ம் தேதி முதல் ஜெயலலிதா தனது சூறாவளி சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications