வி.சி. விழுப்புரம் வேட்பாளர் நீதிபதி சாமிதுரை

விழுப்புரத்தில் தொழிலதிபர் மடிப்பாக்கம் வேலாயுதம் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பெரும் பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மடிப்பாக்கம் வேலாயுதத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில்தான் உத்தரவிட்டது.
இதையடுத்து வேலாயுதம் மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி வேலாயுதத்திற்குப் பதில் ஓய்வு பெற்ற நீதிபதி சாமிதுரை போட்டியிடுவார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையை அடுத்துள்ள பாலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிபதி சாமிதுரை. மனைவி பெயர் டாக்டர் நித்யகல்யாணி. தற்போது சென்னையில் வசித்து வருகிறார் நீதிபதி சாமிதுரை.
பி.எஸ்.சி, பி.எல், படித்துள்ள நீதிபதி சாமிதுரை, 1955 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1990 முதல் 94 வரை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார்.
1997 முதல் 2001 வரை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இருந்தார்.
திமுக அறிவித்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையில் சாமிதுரையும் ஒருவராக இடம் பெற்றார்.
இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். மூத்த மகள் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பணியாற்றுகிறார். இன்னொரு மகன் என்ஜீனியராகவும், கடைசி மகள் டாக்டராகவும் உள்ளனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications