தமிழத்தில் முலாயம் சிங் யாதவ் மே முதல் வாரம் பிரசாரம்
நெல்லை: தமிழகத்தில் சமஜ்வாடி கட்சி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வரும் மே முதல் வாரத்தில் முலாயம் சிங் யாதவ் தீவிர பிரச்சாரம் செய்கிறார்.
இதுகுறித்து நெல்லையில் நேற்று தமிழக சாமஜ்வாடி கட்சி தலைவர் ஜெயராஜ், செயல் தலைவர் கிருஷ்ணகாந்தன் யாதவ் கூறுகையில்,
தமிழகத்தில் சமஜ்வாடி கட்சியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நெல்லை மாவட்டத்தில் தென்காசி (தனி) தொகுதி வேட்பாளராக ஜோதிராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க உயர் தொழில் நுட்ப பூங்கா அமைக்க பாடுபடுவோம். உபியில் முலாயம்சிங் அங்குள்ள நதிகளை இணைத்தது போல் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வீணாகி கடலில் கலக்கும் அதிக நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றாலத்தை தேசிய சுற்றுலா மையமாக அறிவித்து உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை வர செய்ய நடவடிக்கை மேற்கொள்வோம். தென்காசியில் இருந்து ஆலங்குளம் வழியாக நெல்லை வாகைக்குளம் வழியாக தூத்துக்குடிக்கு செல்லும் வகையில் மேற்கு தொடர்ச்சி மலை கிழக்கு கடற்கரையில் பாதை அமைக்க பாடுபடுவோம்.
விவசாயிகள் பயன்பெரும் வகையில் பழங்கள், காய்கறிகள், ஆண்டு முழுவதும் கெடாமல் பாதுகாக்க நவீன குளிர்சாதன வசதி கிடங்கு அமைய பாடுபடுவோம். கிராமங்களுக்கு சாலை வசதி, பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தொகுதியில் பரவலாக புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை நவீன வசதிகளுடன் அறுவை சிகிச்சை வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்ய பாடுபடுவோம். சமாஜ்வாடி கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் தமிழகத்தில் வரும் மே முதல் வாரத்தில் வருகின்றனர் என்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications