பாஜக-சரத்குமார்-கார்த்திக் திடீர் கூட்டணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திடீரென திசை மாறிச் சென்றுவிட்டதாக பாஜகவால் குற்றம் சாட்டப்பட்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்து அந்தக் கட்சிக்கு அதிர்ச்சி தந்த கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியும் திடீரென பாஜகவுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளன.

தமிழக பாஜக தலைவர் இல.கணேசனுடன் நடிகர்கள் சரத்குமார், கார்த்திக் ஆகியோர் நேற்றிரவு பேச்சு நடத்தி கூட்டணியை முடிவு செய்தனர்.

இதன்படி சமத்துவ மக்கள் கட்சி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருப்பூர் உள்பட 6 இடங்களில் போட்டியிடுகிறது.

நாடாளும் மக்கள் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்தக் கூட்டணியில் டி.ராஜேந்தரின் லட்சிய திமுக, புதிய நீதிக்கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவையும் இணையும் என்று தெரிகிறது.

இது குறித்து சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் நாகராஜன் கூறுகையில்,

இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரவுள்ளன. எனவே சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் விவரம் இந்த பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும். தொகுதிகள் அறிவிக்கப்பட்டவுடன் 18ம் தேதி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றார்.

திருநெல்வேலியில் சரத்குமார் போட்டியிடவுள்ளார்

விருதுநகரில் கார்த்திக் போட்டி:

நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக் நிருபர்களிடம் கூறுகையில்,

எங்கள் கட்சி பாஜகவுடன் 99.9 சதவீதம் கூட்டணி சேர்ந்துள்ளது. இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை மட்டும் நடைபெறவுள்ளது. 3 தொகுதிகளில் எங்கள் கட்சி போட்டியிடும். விருதுநகர் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன்.

தென் மாவட்டங்களிலும், ராமநாதபுரம் தொகுதியில் திருநாவுக்கரசரை ஆதரித்தும், தென் சென்னையில் இல.கணேசனை ஆதரித்தும் நான் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

எங்கள் கட்சி பாஜக சின்னத்தில் போட்டியிடுவதா, தனி சின்னத்தில் போட்டியிடுவதா என்பது குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும் என்றார்.

விருதுநகரில் முக்குலத்தோர் வாக்குகளைப் பிரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு நெருக்கடி ஏற்படுத்த கார்த்திக்கை தனித்துப் போட்டியிடச் செய்ய திமுக அவருடன் பேசி வந்தது. இந் நிலையில் இந்தக் கூட்டணி சார்பில் கார்த்திக் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+