தீவிரவாதி கஸாப்பை கொல்ல வெளிநாட்டில் சதி
லண்டன்: மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைதாகியுள்ள ஒரே தீவிரவாதியான கஸாப்பை கொல்ல வெளிநாட்டில் சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஜெயந்த் படேல் கூறியுள்ளார்.
இதுகுறித்து லண்டன் பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கஸாப்பைக் கொல்ல தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். இந்த சதி வெளிநாட்டில் தீட்டப்பட்டுள்ளது. இதையடுத்தே கஸாப்புக்கான பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கஸாப் அடைக்கப்பட்டுள்ள சிறையில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறை அறையிலிருந்து தனி நீதிமன்றத்திற்கு (கஸாப் அடைக்கப்பட்டுள்ள ஆர்தர் சாலை சிறைக்குள்ளேயே இது அமைந்துள்ளது) கொண்டு வரும் பாதையில், குண்டு துளைக்காத தனி காரிடார் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே, கஸாப்பை கொல்லும் சதித் திட்டம் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டிருப்பதாக மும்பை இணை ஆணையர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
மேலும், கஸாபுக்கு மும்பைத் தாக்குதல் குறித்த முழு விவரமும் தெரியவில்லை. ஓரளவே தெரிந்துள்ளது. எனவே இந்த சதித் திட்டத்தின் மூளை யார் என்பது நமக்கு இப்போதைக்கு தெரியாது. நம்மிடம் சிக்கியிருப்பது வெறும் அம்புதான் என்றார்.
இதற்கிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த மூத்த அரசியல் நிபுணரான கிறிஸ்டைன் பேர் கூறுகையில், முதன் முதலாக ஒரு தீவிரவாதி - பாகிஸ்தானி என்ற உறுதியான ஆதாரத்துடன் - இப்போதுதான் இந்தியாவில் சிக்கியுள்ளான். அவனுக்கும் லஷ்கர் இ தொய்பாவுக்கும் இடையிலான தொடர்புகளுக்கு முழு ஆதாரங்களும் கிடைத்துள்ளன. எனவே பாகிஸ்தானுக்கு இது மிக மிக சிக்கலை ஏற்படுத்தும் என்றார்.
கஸாப்புக்கு புது வக்கீல்:
இந் நிலையில் கஸாப்புக்காக வாதாடுவதற்காக அப்பாஸ் கஸ்மி என்ற வக்கீலை மும்பை தனி நீதிமன்றம் நியமித்துள்ளது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குக் காரணமான தீவிவராதிகளில் உயிருடன் பிடிபட்டவர் கஸாப் மட்டுமே. தற்போது இந்த வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது.
கஸாப்புக்கு ஆதரவாக வாதாட வக்கீல்கள் யாரும் முன்வரவில்லை. முன்வந்த சிலரும் எதிர்ப்புகள் காரணமாக விலகி விட்டனர்.
இந்த நிலையில் மும்பை தனி கோர்ட்டே கஸாப்புக்காக வக்கீலைத் தேர்வு செய்தது. அது தேர்வு செய்த வக்கீல் அஞ்சலி வாக்மரே. ஆனால் இவர் மும்பை தாக்குதல் வழக்கில் பாதிக்கப்பட்ட ஒருவருக்காகவும் வாதாடி வருகிறார்.
இதை கோர்ட்டுக்கு அவர் தெரிவிக்காத காரணத்தால், தொழில் தர்மத்தை மீறி விட்டதாக கூறி அவரை நீக்கி விட்டது மும்பை கோர்ட்.
இந்த நிலையில் தனக்காக ஆஜராகி வாதாட பாகிஸ்தான் வக்கீல் தேவை என தனி நீதிபதி தஹிளியானியிடம் கோரிக்கை வைத்தான் கஸாப்.
இந்தக் கோரிக்கை குறித்து அரசுத் தரப்புடன் தனி கோர்ட் விவாதித்து வந்தது. கஸாப்பின் கோரி்க்கையை பாகிஸ்தான் அரசிடம் தெரிவிக்க மத்திய அரசும் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் கஸாப்புக்கு புதிய வக்கீலை மும்பை கோர்ட் நியமித்துள்ளது.
இன்று ஆர்தர் சாலை சிறைச்சாலை வளாகத்திற்குள் உள்ள தனி நீதிமன்றத்தில் இதை நீதிபதி தஹிளியானி அறிவித்தார். அவர் முன்பு கஸாப்பும் ஆஜர்படுத்தப்பட்டான்.
அப்போது, தனியாக பிராக்டிஸ் செய்து வரும் அப்பாஸ் கஸ்மி, கஸாப்புக்காக வாதாடுவார் என நீதிபதி தெரிவித்தார்.
அப்போது, தனக்கு பாகிஸ்தான் வக்கீலே வேண்டும் என நீதிபதி தஹிளியானியிடம் கோரிக்கை வைத்தான் கஸாப். ஆனால் அது சாத்தியமில்லையே என்று நீதிபதி கூறியபோது, ஒருமுறை முயற்சித்துப் பார்க்க விரும்புகிறேன் என்றான் கஸாப்.
பின்னர் அவனே, நான் ஏற்கனவே இதுதொடர்பாக கடிதம் எழுதினேன். ஆனால் பாகிஸ்தான் அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பாகிஸ்தான் அரசு எனக்காக வக்கீலை ஏற்பாடு செய்யும் என நான் நம்பவில்லை. எனவே இங்கேயே வக்கீலை ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினான்.
இதையடுத்து கஸ்மியின் நியமனத்தை ஏற்றுக் கொள்ளும்படி கூறிய நீதிபதி தஹிளியானி அவரை கஸாப்புக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
நீண்ட தாடியுடன் காணப்பட்டான் கஸாப். புன்னகை தவழும் முகத்துடன் காணப்பட்டான். சிறை அறையில் படிக்க தனக்கு செய்தித்தாள்கள் வழங்க வேண்டும் என அவன் கோரினான்.
சிறை வளாகம் மற்றும் வெளியில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 300க்கும் மேற்பட்ட போலீஸார் சிறையைச் சுற்றிலும் உள்ள சாலைகளில் குவிக்கப்பட்டிருந்தனர். போக்குவரத்தும் திருப்பி விடப்பட்டிருந்தது.
இதற்கிடையே கஸாப்புக்காக முன்பு வாதாடவிருந்த வக்கீல் அஞ்சலி வாக்மரேவுக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வக்கீல் கே.பி.பவார், கஸாப்புக்கான புதிய வக்கீலான கஸ்மிக்கு துணையாக செயல்படலாம் என கோர்ட் கூறியுள்ளது.
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications