வாசன் ஆதரவாளர் அழகிரி கடலூர் காங். வேட்பாளர்

Subscribe to Oneindia Tamil

Azhagiri
கடலூர்: ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான கே.எஸ்.அழகிரி, கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

56 வயதாகும் அழகிரி 1991, 96 ஆகிய இரு முறை சிதம்பரம் சட்டசபைத் தொகுதி உறுப்பினராக இருந்தவர். தீவிர வாசன் ஆதரவாளர்.

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம்தான் இவரது சொந்த ஊர்.

தமிழக தேசிய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், விவசாய மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

சிறந்த பேச்சாளரான அழகிரி, ஜி.கே.வாசனின் ஆதரவோடு களத்தில் குதித்துள்ளார்.

கடலூரில் அதிமுக, தேமுதிக சார்பில் அண்ணன் தம்பிகளான மு.சி. சம்பத் மற்றும் மு.சி.தாமோதரன் மோதுகின்றனர். இவர்களுக்கு இடையில் அழகிரி எப்படி ஜொலிக்கப் போகிறார் என்பது கேள்விக்குறிதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+