கோவை, நெல்லை: கருணாநிதி-ஜெ சுறுசுறு பிரச்சாரம்
கோவை & நெல்லை: திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 26ம் தேதி கோவையில் முதல்வர் கருணாநிதி பிரச்சாரம் செய்கிறார். அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்திலும் பேசுகிறார்.
வ.உ.சி. பூங்கா அல்லது சிவானந்தா காலனியில் இந்த பொதுக் கூட்டம் நடக்கவுள்ளது.
நெல்லையில் ஜெயலலிதா நாளை பிரச்சாரம்:
நெல்லை, தூத்துக்குடியில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி்முக பொது செயலாளர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார்.
நாளை பகல் 12.45க்கு தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்படரில் பாளை ஆயுதப்படை மைதானத்திற்கு வருகிறார். பின்னர் காரில் வந்து நெல்லை டவுன் வாகையடிமுனையில் நடக்கும் பொதுகூட்டத்தில் வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்துப் பேசுகிறார். கூட்டம் முடிந்த பின் ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் செல்கிறார். அன்றிரவே மதுரை சென்று தங்குகிறார்.
மறுநாள் தென்காசி இந்திய கம்யூ வேட்பாளர் லிங்கத்தை ஆதரித்து பகல் 1 மணிக்கு சங்கரன்கோவி்ல் வடக்கு ரத வீதியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் தூத்துக்குடியில் நடக்கும் தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
27ம் தேதி பொள்ளாச்சியில்...
அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏப்ரல் 27ம் தேதி பொள்ளாச்சி வருகிறார். அன்று இரவு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்தும், திருப்பூர் வேட்பாளர் சிவசாமியை ஆதரித்தும் பேசுகிறார்.
மே 3ம் தேதி கோவையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். அதே நாளில் மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் நீலகிரி மதிமுக வேட்பாளர் கிருஷ்ணனை ஆதரித்து பேசுகிறார்.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்!












Click it and Unblock the Notifications