ஆரணி தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டி

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் கிருஷ்ணசாமி. அவரை மாற்றி விட்டுத்தான் தங்கபாலுவை தலைவராக்கியது காங்கிரஸ் மேலிடம்.
68 வயதாகும் கிருஷ்ணசாமி, சுத்தமான விவசாயி. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்.
எந்த கோஷ்டியிலும் சேராமல் தனியாக செயல்பட்டு வருபவர். அடக்கமான தலைவர்.
பி.ஏ., பி.எல். படித்துள்ள கிருஷ்ணசாமி, டாக்டர் ராமதாஸின் சம்பந்தி ஆவார். இவரது மகளைத்தான், டாக்டர் அன்புமணி ராமதாஸ் மணந்துள்ளார்.
1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் வந்தவாசி தொகுதியில் வெற்றி பெற்றார். தற்போது வந்தவாசி நீக்கப்பட்டு ஆரணி தொகுதியாகியுள்ளது.
இதன் காரணமாக தற்போது ஆரணி தொகுதியில் போட்டியிடுகிறார் கிருஷ்ணசாமி.
பாமகவை, காங்கிரஸ் கூட்டணியில் இணைக்க கிருஷ்ணசாமி மூலமும் முயன்றது காங்கிரஸ். கிருஷ்ணசாமியும், அன்புமணியை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று பேசிப் பார்த்தார். ஆனாலும் முடியாமல் போனதால் பெரும் ஏமாற்றத்துடன் தற்போது தேர்தலை சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications