நளினி, முருகன், 5 பேரை விடுவிக்கக் கோரி மனு
சென்னை: விடுதலை செய்யக் கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர்களது வழக்கறிர் தாக்கல் செய்துள்ள மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ல் மே மாதம் 21-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஜெயின் கமிஷன், விசாரணை நடத்தியது.
பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் தனியாக விசாரணை நடத்தப்பட்டு நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவி, அறிவு ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
ஜெயின் கமிஷன் விசாரணை 1998-ல்தான் முடிந்தது. அதற்கு முன்பே 7 பேருக்கும் பூந்தமல்லி கோர்ட்டு தண்டனை விதித்து விட்டது.
ஜெயின் கமிஷன் அறிக்கையில் புகார் கூறப்பட்ட சந்திராசுவாமி, சுப்பிரமணியசாமி ஆகியோரை விட்டு விட்டார்கள். எனவே தண்டனை பெற்ற நளினி- முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
ஏற்கனவே ஒரு முறை நளினி தன்னை விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்தக் கோரிக்கை குறித்து சிறைத்துறை மறு ஆய்வுக்குழு பரிசீலிக்குமாறு கூறி மனுவை பைசல் செய்தது உயர்நீதிமன்றம் என்பது நினைவிருக்கலாம்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications